2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்விசாரா ஊழியர்களுக்கு செயலமர்வு

Kogilavani   / 2015 மார்ச் 25 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்விசாரா அரச ஊழியர்களின் செயற்பாடுகளை வினைத்திறனாக்குவதும் தெளிவின்மை மற்றும் பிரச்சினைகளை குறைப்பதற்குமான விடயங்கள் தொடர்பாக ஆராயும் செயலமர்வு செவ்வாய்க்கிழமை (24) அம்பாறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்விசாரா உழியர்கள் பணியாற்றும் காரியாலயங்களில் ஏற்படும் பிரச்சினைகள், ஊழியர்களின் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு, மற்றும் சுயவிபரக் கோவையிலுள்ள குறைபாடுகளைத் தீர்த்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மாவட்டத்திலுள்ள வலயக்கல்வி அலுவலகங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கல்வித்திணைக்கள உத்தியோகஸ்தர்கள், கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X