2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஒலுவில் அல்-ஜாயிஸா பெண்கள் வித்தியாலயத்தின் தரம் 06 முதல் 11 வரையிலான மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, பாடசாலை கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

ஜொஹெனிடர் சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் சேன் ஜோன்ஸ் அம்பியுலன்ஸின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை பாடசாலை மற்றும் கிராமிய மட்டத்தில் நடத்தி வருகின்றது.

சிறுவர்களின் உரிமைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கான வன்முறைகள், சட்ட ஆலோசனைகள் பற்றிய விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டன.

சிறுவர்பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் திட்ட உத்தியோகத்தர் கே.ஏ.அண்டர்ஷன், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாதுகாப்புப் பிரிவுக்;கான பிராந்திய பொலிஸ் அதிகாரி ஏ.எம்.பாரீஸ், அதிபர் இஸட்.கலீலுர்றஹ்மான் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X