2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 மார்ச் 25 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக இன்று புதன்கிழமை (25) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சவூதி அரேபிய அரசாங்கத்தால் நன்கொடையாக அமைக்கப்பட்ட 500 வீடுகள், சுமார் 10 வருடங்களைத் தாண்டியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த வீட்டுத்திட்டம் எவருக்கும் பயனில்லாத வகையில் காடுகளும் பற்றைகளும் வளர்ந்து அழிந்து வரும் நிலையில் காணப்படுகின்றன.

கடந்த அரசாங்கம், இனப்பாகுபாடு காட்டி இந்த வீட்டுத்திட்டத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது.

புதிய அரசாங்கம், நல்லாட்சிக்கான அறைகூவல் விடுத்து வெற்றி பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலிருந்து வருவதனைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுகளை துரிதமாக வழங்கக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டத்தை பிரதேச மக்கள் மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X