2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சீருடை, கைநூல்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட  அஹதிய்யா பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு சீருடையும் மாணவர்களுக்குக்  கைநூல்களும்; வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையிலுள்ள அம்பாறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனச் செயலாளர் எஸ்.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான நூறுல் அமீன், நாசில் அஹமட், மாவட்டக் கலாசார உத்தியோகத்தர்களான ஏ.பி.சுபைதீன், எம்.முப்தி உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X