2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சிறுநீரக நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச கிராம உத்தியோகத்தர்களுக்கான சிறுநீரக நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வைத்தியசாலையில் புதன்கிழமை(25) நடைபெற்றது.

சுகாதார அமைச்சின் சிறுநீரக நோய் தொடர்பான தேசிய விழிப்புணர்வு வேலைத்திட்டத்துக்கு அமைய, கிராம மட்டத்திலான மக்களுக்கும் சிறுநீரக நோய் தொடர்பான விழப்புணர்வு சென்றடையும் வகையில் 32 கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தர்களுக்கு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்கர் தலைமைiயில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இதன் போது தொற்றா நோய்க்கான காரணங்கள், கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள், சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் சிறுநீரக நோய்க்கான காரணங்கள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விளக்கமிளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X