2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஜனாதிபதி புலமைப் பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சம்மாந்துறைக் கல்வி வலயத்தில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்தி, உயர் தரக் கல்வியைத் தொடர எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, ஜனாதிபதி புலமைப் பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நேற்று (24) இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பஸீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.ரி.சஹாதேவராஜா, எம்.எச்.எம்.ஜாபீர், எஸ்.புவநேந்திரன் வலயக் கணக்காளர் ஏ.எச்.தஸ்ரீக், கல்லூரி அதிபர் திருமதி.ஹபீறா சலீம் உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு உரை நிகழ்துகையில்,

இந்த ஜனாதிபதி புலமைப்பரிசில் நிதியைப் பெறுகின்ற மாணவர்களது வாழ்வு ஒளிபெற வேண்டும், அதேபோன்று உங்களோடு படிக்கின்ற ஏனைய மாணவர்களும் சமாந்தரமாக முன்னேற வேண்டும்.

அவர்களது வாழ்வும் ஒளிபெறவேண்டும் என்று பிரார்த்திப்பதோடு உங்களது பெற்றோர்களின் எண்ணங்கள், அபிலாசைகள் நிறைவேறப் பிரார்த்திக்க வேண்டும்.

அதேவேளை, இந்நிதியத்தின் முழுப்பயனையும் எதிர்காலத்தில் பெற்று இந்த நாட்டில் வாழும் நமக்குள் எந்த வித தடைகளோ, வேலிகளோ இல்லாமல் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்ற மனஉணர்வோடு வாழவேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

மாணவர் ஒருவருக்கு ரூபாய் 6,000 வீதம் 103 மாணவர்களுக்கு மொத்தம்  618,000 ரூபாய்; அரச நிதி தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X