2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தற்கொலை மரணங்களை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வு செயலமர்வு

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற தற்கொலை மரணங்களை தடுக்கும் நோக்கில், பொது மக்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு செவ்வாய்கிழமை (24) நடத்தப்பட்டுள்ளது.

இச் செயலமர்வு திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் இயங்கி வரும் பால் நிலைசார் வன்முறை தடுப்பு மையத்தின் கூட்ட தீர்மானத்துக்கு இணங்க, திருக்கோவில் விநாயகபுரத்தில் இம் மாதம் தொடர்ச்சியாக இடம்பெற்ற நான்கு தற்கொலை மரணங்களை அடுத்து அப்பகுதி பெண்களை விழிப்பூட்டும் நோக்கிலேயே இச் செயலமர்வு  நடாத்தப்பட்டுள்ளது.

இச் செயலமர்வை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உளமருத்துவ சமூகப் பணியாளர் எம்.ஜ.ஹைதர், பால் நிலைசார் வன்முறை தடுப்பு மையத்தின் திட்ட இணைப்பாளர் நடராசா சுமந்தி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கலைவதனி, உளவளத்துறை உத்தியோகத்தர் த.சிலோஜினி மற்றும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் பால் நிலைசார் வன்முறை தடுப்பு மையத்தின் பணியாளர் தனபாலசிங்கம் குமுதினி ஆகியோரும் கலந்து கொண்டு பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X