2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மட்டு. –அறுகம்பைவரையான ரயில் போக்குவரத்து தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

மட்டக்களப்பு, கல்முனை, அறுகம்பை ஊடாக புகையிரத போக்குவரத்து திட்டத்தை  ஆரம்பிப்பதற்கான கோரிக்கைகள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் ஒரு கோடி ரூபாய்  நிதியுதவியில்  நிர்மாணிக்கப்பட்ட அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் மொழி கற்பித்தல் ஆய்வுகூட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (24) மாலை நடைபெற்றது. இந்த விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமான நட்பு நாடுகள். தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது.  இன்னும் மிக நெருக்கமான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் நன்மை கருதி பாரிய  அபிவிருத்தித்  திட்டங்களை இந்திய அரசாங்கம் செய்துவருகின்றது. சமூக, கலாசார, கல்வி ரீதியாக பல வேலைத்திட்டங்களை இலங்கையில் செய்துவருகின்றோம். கூடுதலான மாணவர்களுக்கு இந்தியாவில் கற்பதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.

இலங்கை ஓர் அழகான நாடு என்பதுடன், இன ரீதியாக நோக்காமல் மக்கள் என்ற அடிப்படையில் உதவி செய்வதற்கான எண்ணத்தை நாம் கொண்டுள்ளோம்' . என்றார்.


  Comments - 0

  • Arouf Ajwath Thursday, 26 March 2015 04:49 AM

    Ithu Engalathu Siruvayathukkanavu,Niraivearuma?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X