2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

த.தே.கூவின் அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம் நாளை திறப்பு

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம், தம்பிலுவில்-02 பிரதான வீதியில் நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் எஸ்.நகுலனின் தலைமையில் இடம்பெவுள்ளதுடன் இவ் அலுவலகத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

மேலும் விருந்தினர்களாக கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் மற்றும்; கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் சம்மந்தமான நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X