Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 26 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
'ஆரோக்கியமான சமுகத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு வருடாந்தம் அதிகமான தொகையை ஒதுக்கி வருகின்றது. ஆனால், அதனை எமது மக்கள் கணக்கெடுப்பதில்லை. வைத்தியசாலைகள் பெறுமதிமிக்க மருந்துகளை இலவசமாக வழங்கி வருகின்றன. எமக்கு அவை இலவசமாக கிடைப்பதல் அவற்றுக்கு பெறுமதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது'என கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை, கல்லரிச்சல் பிரதேச எஸ்.29ஆம் வாய்கால் துப்புரவு செய்யும் பணி, செவ்வாய்க்கிழமை(24) சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சுர் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் சம்மாந்துறை கல்லரிச்சல்- 1,2,3 ஆகிய கிராமசேவகர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் இச்சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'அரசாங்கம் இந்த மாதம் 23 – 29ஆம் திகதிவரை சுகதார வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
அதனை நாம் முழுமையாக பயன்படுத்தி பிரயோசனத்தை அடைந்துகொள்ள வேண்டும். எமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நாம் இன்று இயந்திர வாழ்கை வாழ்ந்து வருகின்றோம். எமது நாளாந்தக் கடமைகளைக்கூட நிறைவு செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம். இந்த நிலையில் எவ்வாறு பொதுவேலைகளைப்பற்றி சிந்திக்க முடியும் என்ற எண்ணப்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
03 Oct 2025