2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அ.இ.ம.கா.வின் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் நியமனம்

Gavitha   / 2015 மார்ச் 26 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில்  பிரதேசத்துக்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட்,  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரிஷாத் பதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலத்தில் வைத்து புதன்கிழமை (25)  இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான சீ.எம்.ஹலீம் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X