2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அட்டாளைச்சேனையில் டெங்கொழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2015 மார்ச் 26 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.அறூஸ் பைஷல்

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பிரதேச செயலகம் என்பன இணைந்து பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கையை இன்று வியாழக்கிழமை (26) முன்னெடுத்தனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு நாடளாவிய ரீதியில் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் 'புதியதோர் பழக்கம் – டெங்குவுக்கு தடுப்பு' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமையவே இவ் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்படி பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின்போது, அட்டாளைச்சேனை 15, 16 ஆம் பிரிவுகளில் உள்ள அரச பாடசாலைகள், திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இவ்விரு கிராம சேவகர்கள் பிரிவுகளை பார்வையிடுவதற்காக 16 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குவதுடன்; வீட்டின் சுற்றுச் சூழலும் பார்வையிடப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X