2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நெசவு பயிற்சி நெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 26 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்,எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

அம்பாறை, நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஒரு வருடகால நெசவு போதனா பயிற்சி நெறியை  பூர்த்திசெய்த மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (25) கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின்  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயிற்சினை நெறியை பூர்த்திசெய்த  மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளருமான சீ;.எம்.ஹலீம், அமைச்சின் உயர் அதிகரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X