2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வெளிவாரி பட்டதாரிகளுக்கான விண்ணப்பம் கோரப்படாமல் இழுத்தடிப்பு

Gavitha   / 2015 மார்ச் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

வெளிவாரி பட்டதாரிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம், கடந்த 4 வருடங்களுக்கு மேல் கோரப்படாமல் உள்ளதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்னசெய்வது என்று தெரியாமல் அல்லல்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளிவாரி பட்டப்படிப்புக்காக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு வருடாந்தம்  விண்ணப்பம் கோரப்பட்டு, அதற்கான பட்டப்படிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக கோரப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு சென்று விசாரித்தால்  அவர்கள், இது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக அவர்களுடனேயே பேச வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வினவுவதற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு திணைக்களத்துக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்த போது, அந்த தொலைபேசி இயங்காத நிலையில் உள்ளது. இந்த பட்டப்படிப்பு நடைபெறுமா இல்லையா என்பதை தெரிவித்தால், நாங்கள் வேறு ஏதாவது பட்டப்படிப்பை தொடர நடவடிக்கை எடுப்போம். எனவே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சரியான பதிலை எமக்கு வழங்க முன்வரவேண்டும்” என்று வெளிவாரி பட்டப்படிப்புக்காக காத்திருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X