2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பெண்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

Sudharshini   / 2015 மார்ச் 26 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டு, திவிநெகு நிவாரணம் பெறும் குடும்பத் தலைவிகள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (26) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வில், பெண்களுக்கான உரிமைகள், குடும்பப் பொறுப்புகள் தொடர்பிலும் பெண்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள், இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள், குடும்பப் பொறுப்புகள், பிள்ளை வளர்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

திவிநெகு சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எஸ்.எம். உனைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.வை. சுஹிறா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X