2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நடமாடும் சேவை

Sudharshini   / 2015 மார்ச் 26 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் நடமாடும் சேவை இன்று (26) சம்மாந்துறைப் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

மக்களின் காலடியில் சேவை என்ற நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடமாடும் சேவையில் காணிப்பிரிவு, ஆட்பதிவுத்திணைக்களப் பிரிவு, பதிவாளர் பிரிவு, திவிநெகும திணைக்கள பிரிவு, ஓய்வூதியப்பிரிவு, மோட்டார் போக்குவரத்துப் பிரிவு, சமூக சேவைப் பிரிவு, பொலிஸ்திணைக்கள சேவைகள், தபால் திணைக்கள சேவைகள் என்பன வழங்கப்பட்டன.

மேலும் இந்த நடமாடும் சேவையின்போது சமூக சேவைத்திணைக்களத்தினால்; விஷேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பணவுக் காசோலைகள், திவிநெகும திணைக்களத்தின் சமூகப்பாதுகாப்புக் கொடுப்பணவுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர் நளீமி,   மாவட்ட செயலக காணிப்பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X