2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறை மாவட்டத்துக்கான தமிழ் மொழி மூல தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமிக்கப்படுவார்

Sudharshini   / 2015 மார்ச் 26 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களிலேயே 70 சதவீதமான தென்னை வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இருந்த போதிலும் நீண்ட காலமாக இப்பிராந்தியத்துக்கான தமிழ் மொழி மூல தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் இல்லாமையால்; தமிழ் பேசும் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்வதுக்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர் மாமல் கஹ தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டங்களில் தென்னை மயிர் கொட்டியின் பாதிப்பையடுத்து, அது குறித்து ஒலுவில் பிரதேச தென்னந்தோட்டங்களின் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (26) வியாழக்கிழமை ஒலுவிலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

தென்னை மயிர்கொட்டியின் தாக்கம் வறட்சி காலத்தில் அதாவது, ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகரிக்க கூடும். இது தென்னோலைகள் மற்றும் மரத்தின் வளர்ச்சியில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

மயிர்கொட்டியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்னோலைகளை வெட்டி நெருப்பில் எரிக்க வேண்டும்.

நோய் தாக்கததிலிருந்து மீள்வதுக்கு கிருமி நாசினிகளை பயன்படுத்துவதுடன் நோய் பரவாமல் தடுப்பதுக்கு நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். இது தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின்; எம்முடன் தொடர்புக் கொண்டு ஆலோசணைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X