2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள், இன்று வெள்ளிக்கிழமை (27) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்குமாறு கோரியே இந்த பணிப்பகிஸ்கரிப்பு வேலை நிறுத்தம் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஐ.ஹைதர் அலி தெரிவித்தார்.

இந்த பணிப்பகிஸ்கரிப்புக்கான அழைப்பை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்களின் அனைத்துச் சங்கங்களும் இணைந்து விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்த இந்த பணிப் பகிஸ்கரிப்பு, பிற்பகல் 1.00 மணிவரையில் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் அனைத்திலும் எவ்விதமான வேலைகளும் இடம்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X