2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அட்டாளைச்சேனையில் 43 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் 25ஆம் திகதிவரை 43 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்குதல், விழிப்புணர்வூட்டல் மற்றும் வீடுகளில் டெங்கு சோதனை மேற்கொள்ளுதல் நடவடிக்கையின் போதே அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இவ்வாறு கூறினார். 

டெங்கு காய்ச்சல் தொடர்பில் அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தும் கூட அதனை அவர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். 

டெங்கு பற்றிய அறிவுறுத்தல்களை பல ஆண்டு காலமாக சுகாதார அமைச்சு, சுகாதார பிரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலும் கூட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மிக அதிகமாக டெங்கு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவு என்றால் அது அட்டாளைச்சேனை 15, 16ஆம் பிரிவு தான் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X