2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாழடைந்து காணப்படும் வளத்தாப்பிட்டி உப தபால் கட்டடம்

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எம்.எச்.அஷ்ரபினால் 1996ஆம் ஆண்டு வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உப தபால் கட்டடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்துள்ளது. 

இதன் காரணமாக தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படாமலுள்ள தபால் கட்டடத்தில் உப தபாலகத்தை இயங்கச் செய்வதன் மூலம் வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி மற்றும் மல்வத்தை ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நன்மையடைவர். 

இவ்விடயம் குறித்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் கவனத்துக்கு  கொண்டுவந்ததையடுத்து புதன்கிழமை (25) கட்டடத்தின் நிலைமையை அவர் பார்வையிட்டார்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாகீம், சம்மாந்துறை பிரதேச செயலக காணி பிரிவுக்கான உத்தியோகஸ்தர் எஸ்.எல்.எம்.மன்சூர், வளத்தாப்பிட்டி கிராம சேவகர் ஏ.பிரதீப், வளத்தாப்பிட்டி முத்துமாரி அம்மன் ஆலய தலைவர் கே.வெள்ளத்தம்பி, சம்மாந்துறை மாஹிர் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினருடன் கட்டடத்தின் நிலைமை, காணி உரிமம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அவர் கலந்துரையாடினர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தபாற் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து உடனடியாக தீர்வு பெற்றுத் தருவதாக இதன்போது வாக்குறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X