2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்விச் சமூகத்தை உருவாக்கினால், நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை பெறலாம்: உதுமாலெப்பை

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்வி சமூகத்தை உருவாக்கவதன் மூலமே நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தியை அடைய முடியும். அந்த வகையில் கல்வியில் பின்தங்கிய சமூகம் எத்துறையிலும் முன்னேற்றம் காண முடியாது என முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் அறுகம்மை பிரதேச பாடசாiலைகளில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அனைத்து செல்வங்களிலும் மேலான செல்வமாக கல்விச் செல்வமே காணப்படுகின்றதென்ற விடயத்தை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ள போதிலும் அதற்கான முக்கியத்துவம் எந்தளவுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகின்றது என்பதனை நாம் மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

கல்வியில் இன்று பாரிய மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டு வருகின்ற போதிலும் நாம் அதற்கு தயாராக இல்லாத நிலையிலேயே இருந்து வருகின்றோம்.

வறுமை மற்றும் பொருளாதார நிலைமைகள் காரணமாக சிறுவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போதைப்பொருள் பாவனைகள் மூலம் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் பாடசாலை இடைவிலகுவதும் அதிகரித்து வருகின்றதை புள்ளி விபரங்கள் எடுத்து காட்டுகின்றன.

எமது பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்காக நாம் செய்யும் முயற்சிகளை விட கல்வித்துறைக்கு காட்டிவரும் அர்ப்பணிப்பும் முயற்சியும் மிகக் குறைவான நிலையிலேயே உள்ளது.

எனவே, வறுமை மற்றும் ஏனைய பிரச்சினைகளை காரணமாக நினைத்து பிள்ளைகளின் கல்வியை பாதிப்படையச் செய்ய எந்த வகையிலும் நாம் இடமளிக்கக் கூடாது. கல்விக்காக முடியுமான தியாகங்களைச் செய்து எமது சமூகத்தை கல்விச் சமூகமாக மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்' என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X