2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தீயணைப்பு படை பிரிவுகளை பலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

Thipaan   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளின் தீயணைப்பு படைப் பிரிவுகளை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான இரு தரப்பு கலந்துரையாடல், கல்முனை மாநகர சபையில் நேற்று (27) இடம்பெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்த்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத், ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மட்டக்களப்பு, கல்முனை மாநகர சபைகளின் தீயணைப்பு படையினரும் கலந்து கொண்டனர்.

இரு மாநகர சபைகளினதும் தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனம் மற்றும் அவர்களுக்கான உபகரணங்கள், பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இக் கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.

கல்முனை மாநகர சபையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு படையினருக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு, மட்டக்களப்பு மாநகர சபை முன்வந்தமை தொடர்பில் நிஸாம் காரியப்பர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு அரங்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X