2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஸ்ரீ.சு.க.வின் பாலமுனை மத்தியக்குழு அங்கம்வகித்தவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்தியக்குழு முன்னறிவித்தலின்றி கலைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கலைக்கப்பட்ட மத்திய குழுவில் அங்கம்வகித்தவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்தியகுழுவில் அங்கம் வகித்த பலர், அதிலிருந்து விலகி கட்சியின் நடவடிக்கைளை சுயமாக முன்னெடுக்கும் நோக்கில் 25 பேர் கொண்ட மசூறா சபையும் இடைக்கால நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டன.

அதன் தலைவராக மத்திய குழுவின் முன்னாள் தலைவர் ஐ.எல்.சுலைமாலெப்பையும் செயலாளராக ஏ.றிஜாப், மசூறா சபையின் இணைப்பாளராக மத்திய குழுவின் முன்னாள் செயலாளர் எம்.ஏ.சதாத், பொருளாளராக எம்.ஹபீழ் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, கட்சியோடு இணைந்துக்கொண்ட ஆரம்பகால போராளியும் கட்சியின் முன்னாள் பாலமுனை அமைப்பாளருமான எஸ்.எம்.எம்.ஹனிபா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கொண்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மத்திய குழுவின் முன்னாள் செயலாளர் எம்.ஏ.சதாத் தலைமையில் பாலமுனை 3ஆம் பிரிவில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.எல்.அலியார், முன்னாள் மத்திய குழுவின் தலைவர் ஐ.எல்.சுலைமாலெப்பை, சின்னப்பாலமுனை கிளைக்குழுவின் முன்னாள் தலைவர் சலீம் சிக்கந்தர், பாலமுனை கிளைக்குழு முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், மூத்த போராளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X