2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மலேரியா, டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

Gavitha   / 2015 மார்ச் 29 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

அக்கறைப்பற்றிலுள்ள சில கிராம மக்கள் எதிர்நோக்கும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை இல்லாதொழித்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் முகமாக கடந்த 23.03.2015 முதல் 29.03.2015 வரை சிரமதான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஸ்திரமான நாட்டைக் கட்டியெழுப்பும் அரசின் 100 நாட்கள்  வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி  திணைக்களம், மாகாண மட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்களினாலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டத்தின் கீழ், வடிகான்கள் சுத்திகரிக்கப்பட்டதோடு, வீட்டுத்தலைவிகளுக்கு டெங்கு ஒழிப்பு சம்மந்தமாக விழிப்புணர்வை  ஏற்படுத்தும் நோக்கில் 'டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கை கோர்ப்போம்' என்ற துண்டுப்பிரசுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் ஓய்வு பெற்ற மாவட்ட உதவிப் பணிப்பாளருமான ஏ.ஜி.ஏ.கபூர் தலைமையில் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.எம்.கபீர் கிராம உத்தியோகஸ்தர் எம்.நஜீப், கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஆசிரியர் ஏ.சாஹிர். ஏ.ஹுஸைன், பொருளாலர் ஏ.ரி.நகீல் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.எச்.ஜெய்னுதீன் மற்றும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X