2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஊடகவியலாளர்கள், நிவாரண வசதிக்கடன் பெற விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Thipaan   / 2015 மார்ச் 29 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஊடகவியலாளர்கள், வெகுசன உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான  நிவாரண வசதிக் கடன் வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையாற்றும் ஊடகவியளாளர்களுக்கு இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

மூன்று வருட சேவையை பூர்த்தி செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
புகைப்பட கருவி, மோட்டார் சைக்கிள், கணினி போன்றவற்றை கொள்னவு செய்வதற்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும் தொலைநகல்(பக்ஸ்), ஒலிப் பதிவு கருவி என்பவற்றை கொள்வனவு செய்ய தலா 15 ஆயிரம் ரூபாவும் நிவாரணக்கடனாக வழங்கப்படவுள்ளது.

தகுதியுடைய ஊடகவியலாளர்கள், பணிப்பாளர் (ஊடகம்), ஊடக அமைச்சு, இல 163, கிருலப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு – 05 எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை  அனுப்பிவைக்கமுடியுமென வெகுசன ஊடக அமைச்சின் செயளாலர் கருனாரத்ண பரணவிதாரண அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

கடித உறையின் இடது பக்க மூலையில், ஊடகவியளாளர்களுக்கான ஊடக உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு நிவாரண கடன் வசதி வழங்கல் 2015 என குறிப்பிட்டு அனுப்பு மாறும் கேட்கப்பட்டுள்ளது.

ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கபட்ட தெரிவுக் குழு மூலம் தகமையுள்ள விண்ணப்பதாரிகள் நேர்முக பரிட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X