2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

2,000 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதி வழங்க கட்டார் பிரதிநிதிகள் இணக்கம்

Thipaan   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்  

இரண்டாயிரம் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதி பெற்றுக்கொடுக்க, கட்டார் நாட்டு பிரதிநிதிகள்
இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கட்டார் நாட்டு பிரதிநிதிகளான இப்றாகிம் பின்கலீல், பின் ஜஸீம், அல் டர்விஸ் ஆகியோருக்கும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான  ஏ.எல்.எம்.நஸீருக்குமிடையேயான சந்திப்பு
நேற்று (28) சனிக்கிழமை மாலை கட்டாரில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, வசதியற்ற நிலைமையில் காணப்படும் 2,000 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதி வாய்ப்பினை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முன்வைத்தார்.

அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X