2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மின்குமிழ் தயாரித்தல் பயிற்சியின் மதிப்பீடும் தொடர்பயிற்சியும்

Thipaan   / 2015 மார்ச் 29 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தில், பிரக்ரிக்கல் அக்ஷன் நிறுவனத்தின் பால்நிலை தொடர்பான சக்தி பயன்பாடு செயற்றிட்டத்தின் கீழ், மின்குமிழ் தயாரித்தல் பயிற்சியின் மதிப்பீடும் தொடர்பயிற்சியும் சுவாட் அமைப்பின் அக்கரைப்பற்று  தலைமைக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை(28) இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரனையுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலில் 750 பேருக்கு (எல். ஈ. டி) மின்குமிழ் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட்டது.

இறக்காமம், நிந்தவூர், காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு முதற்கட்டமாக பயிற்சியளிக்கப்பட்டது.

அளிக்கப்பட்ட பயிற்சியின்  மதிப்பீடும் அதன் தொடர்பயிற்சியை ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொறியிலாளர் றோயித்த ஆனந்த, வாழ்வாதார நிபுணர் எஸ்.கமலநாதன் மற்றும் எஸ். சோமசூரியம் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X