2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புதிய தேர்தல் முறையால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு: அதாவுல்லா

Thipaan   / 2015 மார்ச் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்;.ஹனீபா

புதிய தேர்தல் முறை மாற்றம் வருமானால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமென தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, இன்று ஞாயிற்றுக்கிழமை(29) தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் 11ஆவது வருடாந்த பேராளர் மாநாடு,  அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.

இம் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர், மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் கொள்கையை பின்பற்றி செயற்படுகின்ற தேசிய காங்கிரஸ், மக்களின் நன் மதிப்பை பெற்ற கட்சியாக கௌரவமாக செயற்படுகிறது.

சில அரசியல் தலைமைகள் தங்களது சுகபோகங்களுக்காக, தேர்தல் காலங்களில் தங்களை மாற்றி செயற்படுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு மக்களிடத்தில் நல்ல அபிப்பிராயங்கள் இல்லை. மக்கள் மாறினாலும் நாங்கள் மாறவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தேசிய காங்கிரஸ் எப்போதும் ஆதரவு வழங்கும். தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம்.

இன்றைய அரசியலில் ஒரு ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது. தேசிய காங்கிரஸ் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு கௌரவமான தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான கூட்டங்களுக்கு சென்று தமது ஆலோசனைகளை  தேசிய கங்கிரஸ் வழங்கி வருகிறது.

கடந்த கால அரசியல் வரலாற்றில் நீண்ட கால அனுபவங்களைக் கொண்ட நாங்கள், எதனையும் அவதானமாக சிந்தித்து தீர்க்கமான முடிவினை எதிர் காலத்தில் எடுப்போம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X