2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மார்ச் 29 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும்  இலங்கை கல்வி நிர்வாக சேவை தரத்தைக் கொண்ட  வீ.ரி.எம்.ஹனீபா மௌலவியின் சேவை நலன் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் புதிய அதிபர் ஏ.எல்.அன்வரை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இன்று(29) நடைபெற்றது.

இப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதித் தலைவர் ஏ.சி.சைபுதீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், நீதிபதிகளான அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லா, எம்.எஸ்.சம்சுதீன், சிரேஸ்ட சட்டத்தரணிகளான அப்துல் கபுர், எஸ்.எம்.ஏ.கபுர்,எஸ்.எல்.ரசீட், அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யு.எம்.வாஹித் மற்றும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள்,பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 இதன்போது ஓய்வு பெற்றுச்செல்லும் அதிபர் வீ.ரி.எம்.ஹனீபா மௌலவியும் புதிய அதிபர் ஏ.எல்.அன்வருக்கும் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இங்கு அதிதிகள் பலரும் உரையாற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X