2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Princiya Dixci   / 2015 மார்ச் 30 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை, பாலமுனை  பிரதேசத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது.
 
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள், சுகாதார பரிசேதகர்களால் பரிசோதனை செய்யப்பட்டன.
 
சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் ஆகியோர் வீடுவீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டதோடு டெங்கு பரவாமல் தடுப்பது தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
 
பாலமுனை, சின்னப்பாலமுனை, திராய்க்கேணி, உதுமாபுறம் ஆகிய பிரதேசங்களில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
 
டெங்கு நுளம்பு பரவக்கூடிய விதத்தில் வீடுகள் மற்றும் காணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X