Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 30 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
இலங்கை ரயில் சேவை பயண நேரங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் பிரதான அதிபர் ஏ.எல்.எம். அலிவா, இன்று (30) திங்கட்கிழமை தெரிவித்தார்.
அந்த வகையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலை 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி பிரயாணிகள் ரயில் 7.30க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
காலை 10.30க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் ரயில் காலை 11.30க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45க்கு புறப்படும் பிரயாணிகள் ரயில் மாலை 5.30க்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் ரயிலுடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
அதேபோல், வழமையாக இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் பாடு மீன் நகர கடுகதி சேவை ரயில் 8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி காலை 6.10க்கு வரும் ரயில் 7.15க்கு புறப்பட்டு 4 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் ரயில் நேரத்தில் மாற்றம் இல்லை. அது அதிகாலை 4.12மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும்.
கொழும்பிலிருந்து இரவு 9 மணிக்கு திருகோணமலை, மட்டக்களப்பு நோக்கி புறப்படும் ரயில் 9.45 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு மட்டக்களப்பை வந்து சேரும்.
மாகோவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மட்டக்களப்புக்கு மதியம் 1.35 மணிக்கு வந்து சேரும்.
மட்டக்களப்பிலிருந்து காலை 5.10க்கு புறப்படும் ரயில் பஸ் கல்லோயாவில் 9.02க்கு சென்றடையும். மீண்டும் அதே ரயில் பஸ் கல்லோயாவிலிருந்து மதியம் 1.30க்கு புறப்பட்டு மட்டக்களப்புக்கு மாலை 4.55க்கு வந்து சேரும் எனவும் புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலீவா மேலும் தெரிவித்தார்.
அத்துடன் காலை நேர புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவுகள் தற்காலிமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத நிலைய அதிபர் கூறினார்.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025