2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஆதரவு குழுக்களின் ஒன்று கூடல்

Thipaan   / 2015 மார்ச் 30 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஐ.ஏ.ஸிறாஜ்

பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரின் தலைமையில் கீழ் இயங்கி வந்த மத்திய குழுவுடன் அதிருப்தியடைந்த நிலையில், மூன்று பிரிவுகளாக செயற்பட்டு வந்த கட்சி ஆதரவு குழுக்களின் ஒன்று கூடல் பாலமுனை 3ஆம் பிரிவில்; நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றது.

பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இஸ்தாபக அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா தலைமையில்இந்த ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றது.

கட்சியின் தற்போதய அமைப்பாளருடன் முரண்பட்டு பாலமுனையில் செயற்பட்டு வந்த 3 குழுக்களும் பாலமுனை ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இஸ்தாபக அமைப்பாளர் எஸ்எம்.எம்.ஹனிபாவின் தலைமையில் கீழ் ஒரே குழுவாக இணைந்து செயற்படுவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்காலத்தில், பாலமுனை பிரதேசத்தின் 6 கிராம சேவகர் பிரிவுகளிலும் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஒன்றினைந்து செயற்படுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் முன்னாள் தலைவரும் மசுறா சபையின் தலைவருமான ஐ.எல்.சுலைமாலெவ்வை, சின்னப்பாலமுனை மத்திய குழுவின் முன்னாள் தலைவர் எஸ்.சிக்கந்தர், மசுறா சபையின் செயலாளர் ஏ.றிஜாப், மசுறா சபையின் பொருளாளர் எம்.எம்.அமீர், மத்திய குழுவின் முன்னாள் செயலாளாரும் மசுறா சபையின் இணைப்பாளருமான எம்.ஏ.சதாத், கட்சியின் சிரேஷ்ட உறுப்பிர்  ஏ.எல்.அலியார் உட்பட கிளைக் குழுக்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள், கட்சியின் மூத்த போராளிகள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X