2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கஞ்சா விவகாரம்: மூவருக்கு அபராதம்

Thipaan   / 2015 மார்ச் 30 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட மூவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தினால் அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு வழக்குகளும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல், முன்னிலையில் இன்று (30) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர், மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

பொலிஸாரால் கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபருக்கெதிராக, பொலிஸாரால், நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது அவருக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (29) கைது செய்யப்பட்ட இரு நபர்களுக்கு தலா ரூ. 7, 500  வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X