2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 31 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.கே.றஹ்மத்துல்லா,ஐ.ஏ.ஸிறாஜ்

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை ஊழியர்கள் அக்கரைப்பற்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் பிராந்திய அலுவலகத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழமையாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமை மற்றும் இடைக்கால வரவு -செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டமைக்கு அமைய சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையை கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அரசாங்கம் தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடின்  நாடு தழுவிய ரீதியில் நீர் தடங்கலை ஏற்படுத்தி நாளை முதல் ஆர்ப்பாட்த்தில் ஈடுபடப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

'உடனடியாக  சம்பள அதிகரிப்பை வழங்கு', 'நல்லாட்சியில் எம்மை ஏமாற்றாதே',  'ஏழை ஊழியர்களின் வயிற்றில் அடிக்காதே' போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X