2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை உரியவர்களிடம் கையளிக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 31 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சுனாமிப் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட அக்கரைப்பற்று, நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை அம்மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும்; என்று  இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷேய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா கேட்டுக்கொண்டார்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர், அஷ்ஷேய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா அண்மையில் பார்வையிட்டார்.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

'சுனாமிப் பாதிப்புக்குள்ளான அக்கரைப்பற்று கடற்கரையோரத்திலிருந்த மக்களுக்காக இந்த நுரைச்சோலை வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.

சவூதி அரசினால்  நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய  500 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம், உரிய மக்களிடம் கையளிக்கப்படாமல்  கைவிடப்பட்ட நிலையிலுள்ளது.

இங்கு  பற்றைகள் வளர்ந்து காணப்படுவதுடன், இந்த வீட்டுத்திட்டம் பாம்பு, பூச்சிகள், வன விலங்குகளின் இருப்பிடமாகவும் தற்போது காணப்படுகின்றது.

குறுகிய ஒரு சிலரின் அரசியல் காரணங்கள் மற்றும் இனவாதிகளின் முட்டுக்கட்டைகளால் ஏழை மக்களின்  கைகளில் சேராமல் இந்த வீட்டுத்திட்டம் காணப்படுகின்றது. இது அநீதியாகும்.

கடந்த 9 வருடங்களாக மக்களுக்கு  கையளிக்கப்படாது சேதமடைந்துகொண்டிருக்கும் இந்த வீட்டுத்திட்டத்தை உரிய மக்களிடம் கையளித்து இந்த மக்களின் துயர் துடைக்கவேண்டும் என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த தேசிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X