2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்முனை மாநகரசபை உறுப்பினரின் வாகனம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 31 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை மாநகரசபையின்  உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான   எ.எம்.ரகீப்பின் வாகனம், இனந்தெரியாதோரினால்  நேற்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமுனையின் பெரியநீலாவணை கிராமத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் இந்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோதே, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்வாறிருக்க, கல்முனை மாநகரசபையின்  உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான   எ.எம்.ரகீப்பின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X