2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பால் சூடாக்கும் இயந்திரம் கையளிப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 31 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தூய பசும்பால் நுகர்வினை பாடசாலை மட்டத்தில் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தால், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்குக்கு பால் சூடாக்கும் இயந்திரம், செவ்வாய்க்கிழமை (31) வழங்கப்பட்டது.

அறபா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம். பயீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அரச கால்நடை வைத்திய அலுவலகத்தைச் சேர்ந்த கால்நடை உற்பத்தி அபிவிருத்தி போதனாசிரியர் தாஹிரா தன்ஸிலின், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.எல்.பஸீல் ஆகியோர் கலந்துகொண்டு பால் சூடாக்கும் இயந்திரத்தை வைபவ ரீதியாக கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X