Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 மார்ச் 31 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இம்முறை வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைவாக, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 95 சதவீதமான மாணவர்கள் சித்தி பெற்று உயர்தரப்பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர் என கல்லூரின் அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார்.
இப்பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் தோற்றிய எம்.எஸ். ஹுஸ்னி அகமட் என்ற மாணவன் ஆங்கில இலக்கியம் அடங்கலாக அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' தர சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, ஆங்கில மொழி மூலம் தோற்றிய எம்.ஆர்.பாத்திமா சுல்பா மற்றும் எம்.பாத்திமா ஹனா ஆகிய மாணவிகள் 8ஏ, 1பி சித்தியையும் தமிழ் மொழி மூலம் தோற்றிய எம்.ஜே.எம்.சுஜைத் 8ஏ, 1பி சித்தியையும் பெற்றுள்ளனர்.
இப்பரீட்சையில் எம்.எச்.சப்ரீனா மற்றும் ஏ.சி.பாத்திமா சுஜா ஆகிய மாணவிகள் 7ஏ, 2பி சித்தியையும் ஜே.எம்.நப்லி சரீப் 6ஏ, 2பி, 1சி சித்தியையும் ஏ.பாத்திமா சபா 7ஏ,2சி சித்தியையும் எம்.எப்.ஜுமைல் 7ஏ,1பி,1எஸ் சித்தியையும் ரி.முஜீஸா 6ஏ,1பி, 2சி சித்தியையும் எஸ்.எல்.பாத்திமா றிஸ்னா 5ஏ,3பி,1சி சித்தியையும் பெற்றுள்ளனர்.
இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள், தரம் 9 - 11 வலயத் தலைவர்கள், உதவி வலயத்தலைவர்கள், பிரதி அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை நலனில் அக்கறை கொண்டோர் போன்றோருக்கு தமது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதாக அதிபர் ஏ.எல்.அன்வர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025