2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீடற்றோருக்கு வீடு வழங்கும் திட்டம்

Princiya Dixci   / 2015 மார்ச் 31 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி வீடமைப்பு அமைச்சின் 'சமட்ட செவன' வீடற்றோருக்கான வீடு வழங்கும் திட்டமொன்றை பொத்துவில் பிரதேச செயலகப்பரிவுக்குட்பட்ட செங்காமம் பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மூவினங்களையும் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் செங்காமம் பிரதேசத்தில் தரிசு நிலமாக காணப்பட்ட அரச காணியிலிருந்து 60 பேச் காணித்துண்டுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த காணியில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடனடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்தவர்களுக்கும் மாதாந்தம் 1,000 ரூபாய் செலுத்தும் விதத்தில் கடன் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேசிய வீடமைப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

வீடமைப்பு சமுர்த்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் நேரடி கண்காணிப்பாளராக பொத்துவில் பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஏ.எம்.தாஜிதீன் செயற்பட்டு வருகின்றார்.

எதிர்வரும் காலங்களில் இக்கிராமத்தை சகல அடிப்படை வசதிகளைக் கொண்ட கிராமமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உதவி தவிசாளர் ஏ.எம்.தாஜிதீன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X