2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'காணாமற்போனோர் தொடர்பில் நீதி கிடைப்பது கல்லிலே நார் உரிப்பதற்கு சமன்'

Thipaan   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

காணாமற் போனவர்கள் காணாமற் போனவர்கள் தான். ஆனால், ஜனாதிபதி  ஆணைக்குழுவுக்கு வந்து போகும் எங்களுக்கோ வயது போய்விடும். எங்களுக்கு நீதி கிடைப்பது என்பது கல்லிலே நார் உரிப்பதற்கு சமன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், நேற்று செவ்வாய்க்கிழமை(31) தெரிவித்தார்.

எனவே, காணாமற் போவதற்கு காரணமாக இருந்தவர்களும்  அவர்களை இல்லாது செய்தவர்களும் கண்முன் இருக்கின்றனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதுடன்   எங்களுக்கு நீதியான தீர்ப்பு வேண்டும் என அவர் தெரிவித்தார்.

காணாமற் போனரின் உறவினர்கள்  சங்கமும் கல்முனை மாணவர் மீட்பு பேரவையும் இணைந்து, எதிர்வரும் 8ஆம் 9ஆம் திகதிகளில், ஆலையடிவேம்பில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை பஸ்கரிப்பது தொடர்பாக நடத்திய கலந்துரையாடல், திருக்கோவில் மெதடிஸ்த தேவாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் காணாமற் போனோர் விடயத்தில் நான் அரசியல் நடத்தவில்லை.

இனிய பாரதியால் கடத்தப்பட்டு காணாமற் போனோரின் உறவினர்கள், முதல் முதலாக அண்மையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உறவுகளை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனையும் துன்பமும். எனது தந்தையான சந்திரநேருவை சுட்டவர்கள் கருணாவும் பிள்ளையானும் என எனது தந்தை வாய்முறைப்பாடு கொடுத்திருந்த போதும் அதற்கு கூட எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை.

எமது பிரதேசத்தில், சின்ன வேராக இருந்து  ஆலமரமாகி எமது பிரதேசத்தை அழித்;த இனிய பாரதியை  எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளேன்.  எனது தந்தையார் கனவு இப்பிரதேசத்தில் நனவாகும்.

எமது உறவுகள், சொந்தங்களை இழந்துள்ளோம். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தன்னம்பிக்கை ஊடாக எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், கல்முனை மாணவர் மீட்பு பேரவை தலைவர் கணேஸ் மற்றும் காணாமற் போனோர் உறவினர்கள் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆலையடிவேம்பில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை பகிஸ்கரிப்பது மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன் காணாமற் போனோரின் உறவுகள் அணிதிரண்டு, அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவது என இக்கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X