2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நிவாரணம் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 01 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கடந்த கால வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் (IIRO) இஸ்லாமியாவின் உதவியுடன் அட்டாளைச்சேனை, ஜம்யத்துத் தர்பியத்தில் உலர் உணவுப் பொருட்கள், புதன்கிழமை (01) வழங்கப்பட்டன.

தலா 4000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் 450 குடும்பங்களுக்கு இதன்போது வழங்கப்பட்டன.

நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஜே.எம்.இம்றான், கலாநிதி முகம்மட் பி.ஜூனைட், அல்-ஒஸ்தாத் அகமட் அல் ஹூஜைலி மற்றும் ஜம்மியா பிரதிநிதிகள் ஆகியோரினால் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பானது உலகின் அனைத்து நாடுகளிலும் அனர்த்தங்கள் மற்றும் ஏனைய பாதிப்புக்களுக்கு உள்ளாகும் மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது என அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஜே.எம்.இம்றான் தெரிவித்தார்.
 
மேலும் இலங்கையில் வெள்ள அனர்த்தம் மற்றும் வறுமைக்குட்பட்ட காத்தான்குடி, பாவற்குளம், மூதூர், அட்டாளைச்சேனை மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்குமான நிவாரண உதவிகளை எங்களது அமைப்பு முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X