2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஜனநாயகத்துக்கு  பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் அமர்வு அதன் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை  (31) நடைபெற்றது. இதன்போது மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகணசபையின் இன்றையநாள் வரலாற்றில் கறைபடிந்த ஒரு நாளாகும். அதுவும் என்னுடைய அரசியல் வாழ்வில் கவலையுடைய ஒரு நாளாகவும் நான் பார்க்கின்றேன்.

கடந்த 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை ஆட்சியில் பல அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் எனது கட்சியும் தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி  கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புகின்ற பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினோம்.

அந்த வகையில் நான் கடந்த மாகாணசபையில் ஒரு அமைச்சராகவும் தற்போதைய மாகாணசபையில் பிரதி தவிசாளராகவும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தேன். ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பதிவியை சரிவர செய்திருக்கின்றேன் என்பதிலும் மாகாணசபைக்கு முழுமையான பங்களிப்பையும்  செய்தவன் என்கின்ற நற்பெயரும் எனக்கிருக்கிறது.

அந்த அடிப்படையில் எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய முன்னால் தவிசாளர் மற்றும் செயலாளர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
விசேடமாக  சிறுபான்மை சமூகத்தினுடைய பாதுகாப்புக்காகவும்  முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் அபிலாஷைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்காகவும் எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்குடனும் எனது கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன்  முதன் முதலில் அவருடைய அமைச்சுப் பதவியை தூக்கி எறிந்துவிட்டு தனது கட்சியின் மகாண சபை உறுப்பினர்கள் மற்றும்  உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் தற்போதைய எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  வெற்றிக்கு பாடுபட்டு உழைத்ததனையும் அறிவீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரதி தவிசாளரை தருவதாக ஏற்கனவே கூறிய இவர், இப்போது என்மீது ஒரு அபாண்டத்தை சுமத்தி கிழக்கு மாகாணசபையினுடைய புனிதத்துவத்தை மாசுபடுத்தி வளர்ந்துவரும் எனது அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு அநியாயமும் செய்யாத என்னை சபையில் அசிங்கப்படுத்துவது என்பது மனிதநேயமிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X