Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ.தாஜகான்
க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் மாலை நேரங்களில் கட்டணம் எதுவுமின்றி வகுப்புக்கள் நடத்தியமையின் விளைவாகவே இம்முறை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்ததாக, அல்-இர்பான் மகளிர் கலலூரியின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் இன்று தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தின் முன்னணிப் பெண்கள் பாடசாலையான அல்ஃ இர்பான் மகளிர் கல்லூரியில் கடந்த வருடத்தைவிட இவ்வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு உயர்வடைந்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
இவ்வருடம் எமது பாடசாலையின் க.பொ.த சாதாரணதரப் பெறுபேறுகளின் சித்தி வீதம் 92 வீதமாகும். இவ்வீதமானது கடந்த வருடத்தை விட உயர்வடைந்துள்ளது.
மாலை நேரங்களில் எமது ஆசிரியர்கள் பிரத்தியே வகுப்புகளை நடத்தியமையே இதற்கு பிரதான காரணம்.
அந்தவகையில், எம்.எஸ்.பாத்திமா பினாரா 8ஏ 1சி, எம்.எம்.பாத்திமா அப்ரிஜா 7ஏ 1பீ 1சி, எம்.எச்.பாத்திமா றினோஸா 7ஏ 1பி 1சி, ஜே.எஸ்.மஸ்வுதா ஹஸ்மத் 7ஏ 1பி 1எஸ், எப்.பாத்திமா சஸ்னா 6ஏ 2பி 1சி, ஜே.சித்தி சுமையா 6ஏ 2பீ 1எஸ், வை.மெஹ்னாஸ் 5ஏ 4பி, எஸ்.சிபா 5ஏ 3பி 1சி ஆகிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
இம்முறை, 76 பேர் பரிட்சைக்குத் தோற்றியதுடன் அவர்களில் 70 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில் இஸ்லாம் பாடத்தில் 100 வீத சித்தியும் தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்தில்;; 100 வீத சித்தியும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் 100 வீத சித்தியும் கணிதத்தில் 77 வீதமும் விஞ்ஞானத்தில் 86 வீதமும் வரலாறு 90 வீதமும் ஆங்கிலம் 50 வீதமும் குடியுரிமைக்கல்வி 96 வீதமும் வணிகக் கல்வியில் 97 வீதமும் இலக்கிய நயம் 77 வீதமும் சித்திரம் 100 வீதமும் சுகாதாரம் 98 வீதமும் சித்தியடைந்துள்ளார்கள்.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025