2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தன்னியக்க இயந்திரமொன்றை அமைக்குமாறு கோரிக்கை

Gavitha   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இலங்கை வங்கிக் கிளையொன்று அமைந்துள்ள போதும் மேற்படி வங்கிக்குரிய தன்னியக்க இயந்திரமொன்று, அப்பிரதேசத்தில் பொருத்தப்படாமை தொடர்பில், குறித்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையில், சுமார் 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர், ஏ.ரீ.எம். அட்டைகளைக் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்காகும்

இருந்தபோதும் அட்டாளைச்சேனையில் இதுவரை இலங்கை வங்கிக்குரிய ஏ.ரீ.எம். இயந்திரமொன்று நிறுவப்படவில்லை. இதனால், இங்குள்ள இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள், அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளைக்குரிய ஏ.ரீ.எம். இயந்திரத்தினூடாக, தமது பணத்தை  பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதற்காக, இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள், பணம் பெறும் ஒவ்வொரு தடவையும் மக்கள் வங்கிக்கு 30 ரூபாவை மேலதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனை கிளை அமைந்துள்ள கட்டடத்தில், ஏ.ரீ.எம். இயந்திரம் பொருத்துவதற்கான அறையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, ஏ.ரீ.எம். இயந்திரமொன்றை நிறுவுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு ஏ.ரீ.எம். இயந்திரம் ஏன் இதுவரை பொருத்தப்படவில்லை என்றும் இப் பிரதேச வாடிக்கையாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனையிலிருந்து சுமார் 05 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள, இலங்கை வங்கியின் அக்கரைப்பற்றுக் கிளையில், ஏற்கெனவே ஒரு ஏ.ரீ.எம். இயந்திரம் இருக்கத்தக்கதாக, இன்னுமொரு ஏ.ரீ.எம். இயந்திரத்தை பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது.

எனவே, அக்கரைப்பற்றுக்கு மேலதிகமாகப் பொருத்துவதற்குத் தீர்மானித்துள்ள இலங்கை வங்கிக்குரிய ஏ.ரீ.எம். இயந்திரத்தை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு வழங்குவதே பொருத்தமான செயற்படாகுமென கூறப்படுகிறது.

எனவே, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் - இலங்கை வங்கிக்குரிய தன்னியக்க இயந்திரமொன்றினை பொருத்துவதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனைப் பிரதேச வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X