2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'இனவாத அரசியலை மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்'

Gavitha   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

இன்று எமது நாட்டில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதா அல்லது சிங்கள மொழியில் பாடுவதா என்ற கோசத்தை வைத்து, இனவாத அரசியலை மக்கள் மத்தியில் திணிப்பதற்கு ஒரு சில இனவாத அரசியல் சக்திகள் முயற்சித்து வருகின்றன என்று பாலமுனை கலாசார அபிவிருத்தி மையத்தின் ஆலோசகரும் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸீறா சபை இணைப்பாளருமான எம்.ஏ.சதாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (02) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்; தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியை இல்லாமல் செய்து, இனவாத அரசியலை எமது நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு இவ்வாறான அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான அரசியல்வாதிகளின் எண்ணம் ஒரு போதும் மக்கள்  மத்தியில் பலிக்கப்போவதில்லை. இன்று மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இன ஐக்கியத்துடனும் வாழ்வதையே விரும்புகின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது, இந்த நாட்டில் ஏற்பட்ட இனவாத செயல்களை கண் மூடித்தனமாக வாய் திறக்க முடியாமல் மௌனிகளாக இருந்தவர்கள் இன்று சுதந்திரம் பற்றி பேசுகின்றனர்.

தற்போது இந்த நாடு கடந்த ஆட்சிக்காலத்தின் போது, இருந்த  நிலையை விட தற்போது நல்ல நிலை உருவாகி இருக்கின்றது. இந்த நிiமையை இல்லாமல் செய்து நாட்டில் மீண்டுமொரு கொடூர ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவர்களின் கனவு ஒரு போதும் பலிக்கப்போவதில்லை மக்கள் இன்று  நல்ல தெளிவுடன் இருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் நடைபெற இருக்கும் தேர்தலில் இவ்வாறானவர்கள் மக்களினால் ஓரங்காட்டப்பட இருக்கின்றனர்.

மக்களை குளப்பி விட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை அடைந்து கொண்டு தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான பகல் கனவை கண்டு கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறானவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது மக்கள் தெளிவாக உள்ளனர். நல்லாட்சியின் பக்கம் மக்கள் அணிதிரண்டுள்ளனர். நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், தேசிய கீதத்தை தமிழில் பாடுவதா அல்லது சிங்களத்தில் பாடுவதா என்ற சர்ச்சையை உருவாக்கி இருக்கின்றனர்.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, தேசிய கீதத்தை தமிழில் பாடலாம் என்று வரையறுத்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையை புரியாத,  உணராத அரசியல்வாதிகள் நாடாளுமன்றம் சென்றிருப்பதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கின்றது.

எனவே, சிறுபான்மை சமூகத்தினரை தவறாக வழி நடாத்தி அதில்  அரசியல் குளிர் காயலாம் என்றெண்ணியிருக்கும் இனவாத அரசியல்   வாதிகளின் கனவு ஒரு போதும் இந்த நாட்டில் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X