2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சிறுநீரக நோயாளர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்,பைஷல் இஸ்மாயில்

தெஹியத்த கண்டிய வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள சிறுநீரக நோயாளர்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (01) நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்  எம்.ஐ.எம்.மன்சூரின்  அழைப்பின் பேரில், சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி  பிரதம அதிதியாக கலந்து கொண்டு விடுதிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன், அம்பாறை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் தலகல மற்றும் பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில், தெஹியத்த கண்டியும் ஒன்றாகும். அது போன்று திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர, கோமரங்கடவல, வான்எல போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான சிறுநீர் நோயினால் பாதிக்கப்படும் மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களைக் குணப்படுத்தும் மற்றும் அவர்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துக்காக  தேவைப்படும் கட்டடம் மற்றும் வசதிகளை கிழக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டைக் கொண்டு நிறைவேற்ற முடியாததால், இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சருக்கு அமைச்சர் மன்சூர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 50 மில்லியன் ரூபாய் இந்த விடுதி நிர்மாணிப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் குறித்த வைபவத்தில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் அமைச்சர்களினால் தெஹியத்த கண்டிய ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X