2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறைக்கு பிரதமர் ஞாயிறு பயணம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி, வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.

இதன்போது பிரதேசங்களினதும் தொகுதிகளினதும் மாவட்ட ரீதியான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பு, ஞாயிற்றுக்கிழமை (05) காலை 9.30 மணிக்கு அம்பாறை தயாகமகே மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X