2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நோய்த் தாக்கத்தினால் தெங்கு பாதிப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டங்களில் தென்னை மயிர் கொட்டியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக தென்னந்தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட தென்னந்தோட்டங்களில் தென்னை மயிர்கொட்டியின் தாக்கத்தினால் தென்னோலைகள் கருகிக் காணப்படுவதோடு தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மரத்தின் வளர்ச்சியும் குன்றிக் காணப்படுகின்றது.

இந்நிலமை தொடருமானால் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுமெனவும் இது பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்துமெனவும் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தெங்கு பயிர்ச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையிடம் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X