2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

குடிநீர் விநியோகத்துக்கான உதவித்தொகை கையளிப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள 144 குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் பெறுவதற்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை அப்துல் மஜீட் நகரசபை மண்டபத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்றது.

மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சவூதி அரேபிய நிதாவுல் ஹைர் நிறுவனப் பணிப்பாளர் அஷ்சேஷ். காலித் பின் அத் தாவூத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சவூதி அரேபிய நிதாவுல் ஹைர் சர்வதேச சமூக சேவை நிறுவனத்தினால் குடிநீர் பெறுவதற்கான செலவுத்தொகையாக 23 இலட்சம் ரூபாய், இதன்போது கையளிக்கப்பட்டது.

சவூதி அரேபிய நிதாவுல் ஹைர் நிறுவன இயக்குநர்களான அஷ்சேஷ். ஜும்மான் அலி ஸஹ்ராணி, அஷ்சேஷ். காலித் பின் நாஸீர் அஷ்ஷஹ்ரி, அஷ்சேஷ். பைசல் மிம்பபி, அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி, சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் மாகாண அமைச்சர் மன்சூரின் பொதுமக்கள் தொடர்பு அதிகரி யூ.எல்.பஸீர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X