Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில் பிரதேச தமிழ்,முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம், சேனைப்பயிர் செய்து வந்த காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாகாண முன்னாள் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினறுமான எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொத்துவில் பிரதேசம் கடந்த 3 தசாப்தங்களாக நிகழ்ந்த யுத்தம் சூழ்நிலையிலும் இயற்கை அனர்த்தங்களிலும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அக்கரைப்பற்றில் இருந்த பொத்துவில் செல்லும்போது தாண்டியடி, கோமாரி, ஊரனி, 60ஆம் கட்ட கிராமம், கனகர் கிராமம் போன்ற கிராமங்களில்; தமிழ் மக்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளில் சேனைப்பயிர், காய்கறிப் பயிர்களைச் செய்து வந்தனர்.
கனகர் என்ற கிராமத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். கடந்தகால யுத்த சூழ்நிலையால் அச்சத்தின் காரணமாக தமிழ்மக்கள் தங்களின் காணிக்குள் செல்ல முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டன.
இதேபோன்று பொத்துவில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த கிரான் கோவையில் உள்ள 502 ஏக்கர் விவசாயக் காணி, செங்காமம், தேக்கன் சேனை, தோணிக்கம, ஆம வெட்டுவான், இறத்தல் போன்ற பிரதேசங்களில் விவசாயம், சேனைப்பயிர், காய்கறிப் பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளில் அம்மக்கள் விவசாயம், சேனைப்பயிர் செய்வதனை வனவள பாதுகாப்புத் திணைக்களம் எல்லையிட்டு தடைசெய்துள்ளனர்.
இதுதொடர்பாக பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நான் பல தடவைகள் வனவள அதிகாரிகள் மத்தியிலும் கோரிக்கை விடுத்து வந்துள்ளேன்.
நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலமையில் நமது பொத்துவில் பிரதேச தமிழ்,முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாயம், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை செய்வதற்கான அனுமதியை பெற அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டுமென அவரது ஊடக அறிக்யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025